TRINITY CHURCH

TRINITY CHURCH
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பரி.திருத்துவ ஆலயத்தில் வருகிற மே 3ம் தேதி ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. அனைவரும் வருக... ஆசீர்வாதம் பெறுக...

Saturday, 22 April 2017

ஆண்மையின்_தாய்மை


முதலிரவு முடிந்ததுமே
முகமெல்லாம் மலர்ந்தவனாய்
அப்பாவின் வாய்ப்புக்காய்
ஆவலுடன் பார்ப்பவனாய்
அவளோட அடிவயிற்றை
நாள்தோறும் வருடிவிட்டு
எப்போது என்குழந்தை
இவ்வுலகு வருமென்பான்
அப்பாடி அவனாசை
அவளைவிட பேராசை
நண்பர்க்கு விருந்தோம்பி
நவின்றிடுவான் அவனாசை
தாயாகிப் படுகின்ற
அவள்அவஸ்தை பார்ப்பதனால்
தன்னெஞ்சே வெடிப்பதுபோல்
தனிமையிலே அழுதிடுவான்
சுகமாகப் பிரசவித்தால்
கொஞ்சமாக அழுதிடுவான்
கத்திரித்துப் பிரசவித்தால்
கதறிகதறி அழுதிடுவான்
பெண்களுக்கு கண்குளத்தில்
வழியவழிய நீரிருக்கும்
ஆண்களுக்கு அதுகொஞ்சம்
ஆழமாகப் போயிருக்கும்
ஆணழுதால் மீன்போல
யாருக்கும் தெரிவதில்லை
பெண்ணழுதால் பிடித்துவைக்கப்
பாத்திரங்கள் போதவில்லை
கனிவாங்கிக் கனியாவான்
கடிவாங்கித் தாயாவான்
அவள்வலியைத் தான்வாங்கித்
தன்வலியாய் பாவிப்பான்
அவள்நடக்கும் பாதையெல்லாம்
இவன்கிடந்து பூவாவான்
அவள்கன்னம் தன்மார்பில்
தான்கிடத்தித் தாயாவான்

குழந்தையைத் தோள்மீதும்
மனைவியை மார்மீதும்
சுமக்கின்ற சுமைதாங்கி
அவனே அவர்களுக்கு**

0 comments :

Post a Comment