TRINITY CHURCH

TRINITY CHURCH
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பரி.திருத்துவ ஆலயத்தில் வருகிற மே 3ம் தேதி ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. அனைவரும் வருக... ஆசீர்வாதம் பெறுக...

நாடா புயல் எச்சகை

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகள் கணக் கெடுப்பு

ஆண்ட்ராய்டு போனில் பேட்டரி பராமரிப்பு

சாத்தான்குளம் ஜமீன் வரலாறு தயாராகிவிட்டது

டிஜிட்டலுக்கு மாறும் உலகம்

செய்தித்தாள் மூலம் நம் மாவட்ட தகவல்களை வெளி உலகுக்கு பரப்புரை செய்துவரும் நமது உலகம் நவீன கால மாற்றத்துக்கு ஏற்ப டிஜிட்டல் வடிவமைப்பிலும் கவனம் செலுத்துகிறது.

நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை: கிணறுகளுக்கு சீல்

Monday 1 May 2017

Friday 28 April 2017

பணம் என்னடா பணம் பணம்... உயிருள்ள நாட்களை பயன்படுத்திக்கொள்...

மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்
கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? (லூக்கா 9 :25)

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார். அப்போது அவரது ஒரு காலில் செருப்பு பிய்ந்துபோனது.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து...

ஐயா நான் நடந்து வரும்போது  என் செருப்பு பிய்ந்துவிட்டது. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.

அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து...
ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய மனிதர்..! ஒன்னும் பிரச்சனையில்ல! நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

சில ஆண்டுகள் கடந்தன...
ஒருநாள் அந்த செல்வந்தர் இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. முன்பொருநாள் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது திடீரென நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..
ஏய்யா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..

அவ்வளவுதாங்க வாழ்க்கை!
ஒரு பிய்ந்த செருப்புக்கு கிடைக்கும் மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது. வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்... ... இது புரியாம பலபேர்
நான் பெரியவன், அதிகாரம் உள்ளவன், அல்லாமல்  சாதி, மத கலவரங்களையும் பிரித்தாளும் சூழ்ச்சியும் செய்கின்றனர்.

கிறிஸ்தவங்களா வாழும் ஒவ்வொருவரும் வாழும் நாட்களில் தன்னைத்தான் கெடுத்துக்கொள்ளாமல், நம்மை முழுதாய் தேவனிடம் கொடுத்து வாழ்ந்தால், நம் ஆத்துமாவை ஆதாயப்படுத்திக்கொள்வோம்! *காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்! - அப்படின்னா என்ன? அது கோதுமைக்குச் சொன்னதா? உடம்புல மூச்சுக்காத்து உள்ளபோதே, ஆன்மீகத்தில் பாவம் நீக்கி பயனடைந்துகொள் என்பதல்லவா அது?* ஆமென்!

Thursday 27 April 2017

ஆன்லைன் மாய உறவுகள்...

என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்? (எரேமியா 2:6)

கர்த்தர் கொடுத்த ஞானத்தைப்பெற்ற சாலொமோன் உலகத்தை முழுதாய் ஆராய்ந்து பார்த்து சுமார் 35 முறைகள் மாயை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். *உலக ஞானியாம் சாலொமோனுக்கு உலகம் எல்லாம் மாயையாய்த் தெரிந்தது! அந்தோ, ஆவிக்குரிய ஞானிகள் என்று சொல்லிக்கொள்வோருக்கு உலகம் எல்லாம் மகிழ்ச்சியாய்த் தெரிகிறது!* எல்லாருமே மாயையான உலக காரியங்களில் மனதைப் பறிகொடுத்து, லயித்து இன்பம் அனுபவிக்கிறார்கள். அந்த இன்பத்தில் இறைவனை மறந்துபோய்விடுகிறார்கள்.

குடும்பம், நண்பர்கள், ஆலய உறவுகளைத் தாண்டி மாயையான ஆன்லைன் உறவுகளுக்குள் சிக்கி, அவர்களது தொடர்புகளுக்காக, அன்புகளுக்காக, லைக்குகள், கமெண்டுகளுக்காக ஏங்குகிறார்கள்! ஒரு மனிதன் அவசரநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கையில் பாருங்கள், ஆன்லைன் உறவுகள் வருவதில்லை! மருத்துவமனை படத்தை பதிவேற்றம் செய்தால், வழக்கம்போல சில உச் கொட்டும் கமெண்டுகள் வரலாம். சிலர் மரித்தேபோனாலும், RIP கமெண்டுகள் வரும். அவ்வளவுதான். கண்ணீர் விடவும், கல்லறை காரியத்துக்கும் சுற்றுப்புறம் வேண்டும் அல்லவா?  ஆன்லைனின் புது நண்பிகளோ, அழகாய் தோன்றும் சகோதரிகளோ, வாலிபர்களோ ஒருபோதும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படி உதவும் ஒரு சிலர் அமையப்பெற்றால் ஆச்சரியமே!

கர்த்தர் உங்களுக்கேற்ற உறவாக தாய்-தந்தையர், கணவன்- மனைவி, குழந்தைகள், சகோதரன்-சகோதரி, பக்கத்துவீட்டு உறவுகள், ஆலய உறவுகள், பள்ளி, கல்லூரி உறவுகள் என்று நிறைய கொடுத்துள்ளார். அவற்றை விட்டுவிட்டு மாயையான உறவுகளைப் பின்பற்றுதல், நமக்கே தெரியாமல், சிக்கவைத்து, சின்னபின்னமாக்கி, ஆண்டவரை விட்டு தூர அழைத்துச்சென்றுவிடும்! அவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்!

பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். (யோனா 2:8)
எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யான உறவாக நம் பரமதகப்பன் இருக்கவேண்டும்! கிருபை வீணாவது தெரிவதில்லை. அந்த மாயையான சங்கிலிகளில் இருந்து விடுதலையாகவேண்டியது தேவை! ஆண்டவரிடம் அநியாயம் இல்லையே! இன்றுவரை மாறாத அன்புதான் உண்டு!