TRINITY CHURCH

TRINITY CHURCH
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பரி.திருத்துவ ஆலயத்தில் வருகிற மே 3ம் தேதி ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. அனைவரும் வருக... ஆசீர்வாதம் பெறுக...

Friday 28 April 2017

பணம் என்னடா பணம் பணம்... உயிருள்ள நாட்களை பயன்படுத்திக்கொள்...

மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்
கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? (லூக்கா 9 :25)

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார். அப்போது அவரது ஒரு காலில் செருப்பு பிய்ந்துபோனது.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து...

ஐயா நான் நடந்து வரும்போது  என் செருப்பு பிய்ந்துவிட்டது. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.

அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து...
ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய மனிதர்..! ஒன்னும் பிரச்சனையில்ல! நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

சில ஆண்டுகள் கடந்தன...
ஒருநாள் அந்த செல்வந்தர் இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. முன்பொருநாள் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது திடீரென நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..
ஏய்யா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..

அவ்வளவுதாங்க வாழ்க்கை!
ஒரு பிய்ந்த செருப்புக்கு கிடைக்கும் மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது. வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்... ... இது புரியாம பலபேர்
நான் பெரியவன், அதிகாரம் உள்ளவன், அல்லாமல்  சாதி, மத கலவரங்களையும் பிரித்தாளும் சூழ்ச்சியும் செய்கின்றனர்.

கிறிஸ்தவங்களா வாழும் ஒவ்வொருவரும் வாழும் நாட்களில் தன்னைத்தான் கெடுத்துக்கொள்ளாமல், நம்மை முழுதாய் தேவனிடம் கொடுத்து வாழ்ந்தால், நம் ஆத்துமாவை ஆதாயப்படுத்திக்கொள்வோம்! *காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்! - அப்படின்னா என்ன? அது கோதுமைக்குச் சொன்னதா? உடம்புல மூச்சுக்காத்து உள்ளபோதே, ஆன்மீகத்தில் பாவம் நீக்கி பயனடைந்துகொள் என்பதல்லவா அது?* ஆமென்!

0 comments :

Post a Comment