TRINITY CHURCH

TRINITY CHURCH
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பரி.திருத்துவ ஆலயத்தில் வருகிற மே 3ம் தேதி ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. அனைவரும் வருக... ஆசீர்வாதம் பெறுக...

Saturday 22 April 2017

ரேணியஸ் ஐயர் - வாழ்கை வரலாறு - சிறு குறிப்பு

ரேணியஸ்
ரேணியஸ் ஐயர் 5 நவம்பர் 1790 – 5 ஜூன் 1838.
இளமைப்பருவம்

திருநெல்வேலியின் அப்போஸ்தலன் சார்லஸ் தியோபிளஸ் எவால்டு ரேணியஸ் 5 நவம்பர் 1790 மேற்கு ரஷ்யாவில் உள்ள மேரியன்பெர்டேர் என்கிற ஊரில் பிறந்தார். தனது 6வது வயதில் தந்தையை இழந்தார். 14ம் வயதில் தன் தாய்க்கு உதவ வேலை தேடி எழுத்தர் வேலையில் சேர்ந்தார். ஊதியம் போதவில்லை. இதை அறிந்த இவரின் பெரியப்பா தன் பண்ணையில் ஈடுபடுத்தி தன்னோடு வைத்துக்கொண்டார். ரேனியசோ ஆத்மீக விஷயத்தில் அக்கறையில்லாதவராக இருந்தார்.

இரட்சிப்பின் அனுபவம்

தனது பெரியப்பா வீட்டில் காணப்பட்ட பக்தி வாழ்க்கை அவரை சிந்திக்க வைத்தது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு தன்னை ஒப்புகொடுத்தார்.

ஊழிய அழைப்பும் அர்ப்பணிப்பும்

தேவனால் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டார். மிகுந்த போராட்டத்தின் மத்தியில் கர்த்தருடைய பரம தரிசனத்திற்கு கீழ்ப்படிந்து கர்த்தருக்காக எதாகிலும் செய்ய வேண்டுமே என்கிற ஆவல் கொண்டார் அர்ப்பணித்தார். அந்நாட்காளில் அவர் அதிகமாய் விரும்பி வாசித்தது இந்தியாவில் தரங்கம்பாடியிலுள்ள மிஷனரிகளின் அறிக்கைகளாகும். அதை வாசிக்க வாசிக்க அவருக்குள்ளும் மிஷனெரி தாகம் பற்றிக்கொண்டது, அதனால் கிறிஸ்துவை அறியாத மற்ற தேசங்களுக்கு அவரை அறிவிக்க வேண்டும் என்கிற தாகம் உண்டாயிற்று. இதை குறித்து தன் பெரியப்பாவிடம் தெரிவித்தார். அப்பணிக்கு இறைக்கல்வி முக்கியம் என்று அறிந்து அதற்குரிய ஆயத்தத்தை செய்தார். இதை அறிந்த பெரியம்மா இவரின் இருதயத்தை மாற்ற முயன்று தோற்றுப்போனார். குடும்பப்பணிகளை விட மிஷனெரி பணி முக்கியமா என்று கேட்டார். ரேணியஸ் உடைந்து போனார். அம்மாவும் கடல் கடந்து என்னை விட்டு போய்விடாதே என்று கெஞ்சினார். கர்த்தர் போக சொன்னால் நான் என்ன செய்யக்கூடும் என்றார். அன்று முதல் அவரின் தாயார் அவரை மிஷனெரி ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார். ஆகஸ்ட் மாதம்7ம் நாள் 1812 ரஷ்யாவில் உள்ள லுத்தரன் சபையில் குருப்பட்டம் கொடுக்கப்பட்டது.

மிஷனெரி பயணம்


14/02/1814 ரேணியஸ்ம் செனார் என்பவரும் சென்னைக்கு கப்பல் ஏறினர். 4/07/1814 சென்னை வந்தார் ரேணியஸ். தரங்கம்பாடி சென்று தமிழை கற்கத்தொடங்கினார். ஐந்தே மாதங்களுக்குள் தமிழை வாசிக்கவும் எழுதவும் தெருப்பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். பின்பு சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன்னில் குடியேறினார். தன் வீட்டின் பின்னே உள்ள விக்கிரகங்களை வணங்கும் மக்களுக்கு சுவீஷேச பணியை ஆரம்பித்தார். சிறுபிள்ளைகளுக்கென்று நற்செய்தி பணியை ஆரம்பிக்க ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார். ஞாயிற்றுக்கிழமைகளில் அதில் ஆராதனை நடத்தினார்.

மணவாழ்வு

ரேணியஸ் ஊழியத்தில் தனக்கு உதவியாய் இருக்க வான் சொமுரன் என்ற பக்தியுள்ள டச்சு குடும்பத்தை சார்ந்த ஆணி என்கிற பெண்ணை மார்ச் மாதம் 7ம் நாள் மணந்தார். ஆணி அம்மாள் ரேணியஸ்ன் திருப்பணியில் பங்கெடுத்து அவருக்கு உத்தம துணைவியாக விளங்கினார்.

ஊழியத்தின் பாதை

ரேணியஸ் மூன்று பள்ளிகளை ஆரம்பித்தார், அதில் இரண்டு பள்ளிகளில் தமிழிலே பாடங்கள் கற்ப்பிக்கப்பட்டன ஒருபள்ளியில் ஆங்கில மொழியில் கற்ப்பிக்கப்பட வழி செய்தார். தொடர்ந்து சென்ற இடங்களில் எல்லாம் பள்ளிகூடங்கள் நிறுவப்பட்டன. கிறுஸ்தவ ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக ஒரு போதனா முறை காலசாலையை அதாவது செமினேறி ஒன்றை துவக்கினார்.
மாணிக்கபுரம் பரி.திரித்துவ ஆலயம்


சோதனையின் பாதை

ரேணியஸ்ன் ஒன்றரை வயதே நிரப்பப்பட்ட குழந்தை திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தது, இந்த சூழ்நிலையில் கிறிஸ்துவுக்குள் தங்களை திடப்படுத்திக்கொண்டனர்.

திருநெல்வேலி வருகையும் கீழ்படிதலின் போதனையும்

CMS ஷ்டேன்னி குழுவினர் ரேணியஸ்ஐ நெல்லைக்கு அனுப்பினால் நலம் என்று எண்ணினர். ரேணியஸ் திருநெல்வேலியில் முதலாவது துவக்கிய பள்ளிக்கூடம் வண்ணாரபேட்டையில் நிறுவியதாகும். ஒரு செமினேரியில் உணவருந்தும் நேரத்தில் வந்த ரேணியஸ் சிலர் மட்டும் உட்க்கார்ந்திருப்பதை பார்த்து விவாதித்தார். ஜாதி வித்தியாசத்தை கண்டித்து பிரசங்கம் செய்தார். ஆயினும் மாணவர்களில் சிலர் நாங்கள் தனியாக உணவருந்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றனர். ரேணியஸ் நீங்கள் அனைவரும் போகலாம் செமினேறி முடிவடைந்தது என்றார். மேலும் சிலர் கேட்டுக்கொண்டதின் பேரில் வேற்றுமை ஒழிக்கப்பட்டது.

பெண்களுக்கான செமினேறி

ஆண்களை போலவே பெண்களுக்கும் செமினேறி ஒன்று நடத்தப்பட்டது. இதன் நோக்கம் நல்ல ஆசிரியைகளாக ஊழியருக்கேற்ற நல்ல மனைவிகளாக உத்தம தாய்மாராக விளங்க அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாகும்.

திருநெல்வேலியின் அசைவு

திருநெல்வேலி நகரை கிறிஸ்துவுக்கு ஆதாயம் பண்ணிவிட வேண்டும் என்பது ரேணியஸ்ன் தீராத வாஞ்சை எனவே இந்துக்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பயன்பெறுவதற்கு எதுவாக ஞானஉபதேச வினா விடை ஒன்றை எழுதி வெளியிட்டார். கிறிஸ்தவர் அல்லாத ஆசிரியரும் அப்பாடத்தை பள்ளியில் கற்றுக்கொடுக்க கட்டளையிட்டார். மாற்கு துண்டுத்தாள் பிரசுர சங்கம் என்பதை நிறுவி அதன் மூலம் தேவையான பிரதிகளை எழுதிக் கொடுத்தார். பத்துக் கற்பனைகளுடன் ஆரம்பமாகும் அந்த வினாவிடைநூல் கடவுளுக்கு முன்பாக தங்களை பாவிகள் என்று உணர்த்தியது. அவருடைய இரத்தினாலே மட்டும் பாவ மன்னிப்புக் கிட்டும் என்று அறிந்தனர். இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்தானம் பெற முன்வந்தனர். நீண்ட சுற்றுப்பயணம்செய்து சுவிசேஷத்தை பிரசங்கித்ததின் விளைவாக சபைகள் பெருகின.

சபைகளின் உருவாக்கம்

ரேணியஸ் திருநெல்வேலி மாவட்டத்தில் 371 சபைகளை உருவாக்கினார். திருநெல்வேலிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் 107 ஆரம்பப் பள்ளிகளை ஆரம்பித்தார் 1825ம் வருடம்மட்டும் 3000 துக்கும் மேற்பட்டோர் சுமார் 90 கிராமங்களில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். 1827ல் புலியூர்குறிச்சி என்னும் கிராமத்தில் ஜெர்மனியில் இருந்த டோனாபிரபு என்பவரது நிதிஉதவியோடு ரேணியஸ் விலைக்கு வாங்கி அங்கே கிறிஸ்தவர்களை குடியேற்றினார். அந்த ஊர் டோனாவூர் என்ற பெயர் பெற்றது.

தோத்திர பண்டிகை

கிறிஸ்தவர்களாக மாறிய சில இந்து குடும்பத்தினர் சிலரின் பழக்கத்தின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் அமைந்திருக்கும் குரங்கனி குடைவிழாவில் கலந்துகொள்ளவதை தடுப்பதற்காக பாளையங்கோட்டையில் 1834ம் ஆண்டு ஜூலை 9ம் தேதியன்று மாம்பழ சங்கத்தை ஆரம்பித்தார் ரேணியஸ். இதன் மூலம்திருமண்டலத்தில் அணைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திர பண்டிகையாக வருடந்தோறும் பாளையங்கோட்டை நூற்றண்டு மண்டபத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாபெரும் அப்போஸ்தலனின் முடிவின் காலம்
உயர்ந்த கருத்துக்களை தெளிந்த நடையில் உணர்த்தும் திறன் ரேணியஸ்’யிடம் அமைத்திருந்தது. இங்கிலாந்து திருச்சபையில் தாம் குறைகளாக கருதியவற்றை ஒரு நூலில் மதிப்புரைக்காக எழுதினர். ஏனெனில் சாதி அமைப்பு சபைகளுக்குள் இருந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை திருசபையினரால் பல எதிர்ப்புகளுக்கு ஆளான ரேணியஸ் ஐயர் 1835ம் வருடம் CMS (Church Mission Society) யிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் திருநெல்வேலி சிந்துபூந்துறையில் யாத்ரிகர் சங்கம் என்கிற சுவீஷே சங்கத்தை நிறுவி சுவீஷச்தை கிராமங்களில் பரப்பினார். ரேணியஸ் ஐயர் 1838 ம் ஆண்டு ஜூன் 5ம் தேதியன்று மரணமடைந்தார். அவரது உடல் அடைக்கலாபுரம் என்கிற ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இப்படிப்போல சுவிஷேச தாகத்தோடு எழும்பி புறப்பட ஆயத்தமாவோமா? இன்னும் கோடி கோடி இயேசுவை அறியாதோர் நம் தேசத்தில் உண்டே! பாரம் உண்டோ ஏக்கம் உண்டோ! எழும்பு சபையே! வாலிபனே! கன்னிகையே! இளவயதின் வாழ்வில் உள்ளவர்களே! வயது முதிர்ந்தவனே! வயது முதிர்ந்தவளே! எழும்பு கர்த்தருக்காய்!

(திருநெல்வேலி மாவட்டத்தில் தொண்டாற்றிய ஐரோப்பியத் திருத்தொண்டர்கள் பல கிராமங்கள்  உருவாக்கினர்.  அக் கிராமங்கள் நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் திட்டமிடப் பெற்றிருந்தன. மெஞ்ஞானபுரம், சாயர்புரம், சமாதான புரம், நாசரேத், அடைக்கலப்பட்டண,  மாணிக்கபுரம்  ஆகிய ஊர்கள். இவ்வூர்களை உருவாக்கியவர்கள் ரேணியஸ், ஜி.யு.போப், மர்காசியஸ்.)

1 comments :